அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆலய தாக்குதலை கண்டித்து கொழும்பில் அமைதிப் போராட்டம்

Report Print Malar in சமூகம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி, மெதடிஸ் தேவாலயத்தின் முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான பெரிய வெள்ளியை முன்னிட்டு மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று பிற்பகல் 1 மணித்தியாலம் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் அனுராதபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது சிலரால் கற்கள் மற்றும் நெருப்பு பந்தங்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் தேவாலயத்திற்குள் ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளியேறாதவாறு கதவு தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100இற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மற்றும் வேறு மதத்தவர்களும் இணைந்து அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள், மத விடுதலை எங்கே? மத விடுதலையை பெற்றுத் தாருங்கள்!, சிறந்த அரசியல் கலாச்சாரத்தின் மூலமாக மத விடுதலையை பெற்றுத் தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers