திருகோணமலையில் நகைகளைத் திருடியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை நிலாவெளி பகுதியில் வீடொன்றினுள் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(20) உத்தரவிட்டார்.

திக்கர, லுக்கோனா, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிலாவெளி பகுதியில் உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நிலாவெளி பகுதியிலுள்ள வீடொன்றினுள் இரவு வேளையில் புகுந்து இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா மெறுமதியான நகைகளை திருடியுள்ளதாகவும்,பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers