முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிணையில் விடுதலை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊடகவியலாளர் ஒருவரிடம் பொலிஸார் விசாரனையை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த ஊடவியலாளரை முல்லைத்தீவு பொலிஸார் இன்று நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் பதில் நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரனைகள் நடைபெற்றுள்ளது.

இதன் போது குறித்த வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers