மன்னார்,வவுனியா மாவட்ட பொதுமக்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Report Print Mohan Mohan in சமூகம்

மன்னார், வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் தினங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை வீழச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், வீடுகளை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பற்ற வகையில் இருக்கக்கூடிய பட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்றுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியான காலநிலை தொடர்கின்ற நிலையிலும் நேற்று பிற்பகல் விசுவமடு உள்ளிட்ட சில பகுதிகளில் மழைபெய்துள்ளது.

இதன்போது பலத்த காற்று வீசியதன் காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன் இடிமின்னல் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers