ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கடந்த 11 மாதங்களாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான பெயர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டிருந்தும் நியமனம் வழங்கப்படாது இழுபறி நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை எதிர்வரும் 2019/04/29 ம் திகதியன்று வழங்குவதற்கான பூரண ஒத்துழைப்பை கல்வியமைச்சிற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவு செய்யப்பட்ட 3850 வீர/வீராங்கனைகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

11 மாதங்களாக ஏற்கனவே செய்த தொழில்களையும் இழந்து பல கஷ்டங்களை அனுபவித்த 3850 இளைஞர்,யுவதிகளுக்கு குறித்த நியமனமானது நிச்சயம் ஆறுதலளிக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எனும் அங்கீகாரம் கிடைக்கும் நாளிலிருந்து இலங்கையின் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்ட 3850 பேரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers