யாழில் ஆலய மகோற்சவத்தில் விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடலை பாடியவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Murali Murali in சமூகம்

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோட்சபத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிப் பாடல்களை பாடிய நாதஸ்வர, தவில் வித்துவான்களை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.

இதன்போது குறித்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, நாதஸ்வர, தவில் வித்துவான்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.