காணாமல் ஆக்கப்பட்டவரின் வயோதிபத் தாய் மீது தாக்குதல்!முறைப்பாட்டினை கண்டுக்கொள்ளாத பொலிஸார்

Report Print Kaviyan in சமூகம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளியின் வயோதிபத் தாய் மீது திருட்டு நோக்கத்தில் இருவரடங்கிய குழுவினர் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக தலையில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மேற்படி வயோதிப தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அத் தாய் தம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி குன்றவையனின் 72 வயதுடைய தாயாரான சி.யோகம்மா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் மேற்கொண்ட பரந்தன் - சிவபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (கள்ளச்சாந்தி), தருமராசா யோகேஸ்வரி (கள்ளயமுனா) ஆகியோரே தாக்குதல் மேற்கொண்டதாகவும், தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாரைச் சமாளிக்கத் தமக்குத் தெரியும் என்று கூறி சுதந்திரமாக நடமாடித் திரிவதாக பலராலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers