பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோலுவோம்! சமுர்த்தி தேசிய புத்தாண்டு வைபம்

Report Print Navoj in சமூகம்

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோலுவோம் எனும் தொனிப் பொருளில் அமைந்த சமுர்த்தி தேசிய புத்தாண்டு வைபம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சி நிகழ்வுகள், வீடமைப்பு அதிஷ்ட சீட்டழுப்பு, சமுர்த்தி உதவிகள் வழங்கல், பரிசுகள் வழங்கல் என்பவற்றை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்வு அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் சப்ராஸ் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, பிரதியமைச்சர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers