மட்டக்களப்பில் தமிழ் கலாசார விளையாட்டு விழா

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - பெரியகல்லாறில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் தமிழ் கலாசார விளையாட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு கல்லாறு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கங்காதரன் தலைமையில், விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், பெரியகல்லாறு மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலாசார விளையாட்டு விழாவில் மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொன்.சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது தமிழர்களின் வீரத்தினையும், பாரம்பரியத்தினையும் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன் கா.பொ.த.சாதாரண தரத்தில் பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers