யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம்!

Report Print Murali Murali in சமூகம்

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பவுண் தங்கநகையும் 50,000 ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்கோட்டை கூழாவடிக்கு அண்மையிலுள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் எவரும் இல்லாத வேளையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் வசிப்பவர்கள் இன்று பகல் வெளியில் சென்றிருந்தபோது, வீட்டினுள் நுழைந்த திருடர்கள், தங்கநகையையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய உரிமையாளர், தங்கநகையும் பணமும் திருட்டுப் போயுள்ளமையைக் கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers