குண்டுத்தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் - இந்து குருமார் அமைப்பு

Report Print Sinan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பொது வழிபாட்டு தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வானது மிகுந்த மனவேதனையை தருவதோடு மிகவும் வன்மையாக கண்டிக்கதக்க விடயமாகும் என இந்து குருமார் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

மேற்படி விடயத்தை இந்து குருமார் அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

சமூக ஒருங்கினைப்பினையும், சமூக நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துகின்ற இறையருள் நிறைந்த இத்தகைய இடங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களால் நாங்கள் மிகுந்த துயரடைகின்றோம்.

நாட்டினது அமைதியினையும், சமாதானத்தினையும், சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நிகழ்வாக இதனை கருதமுடிகின்றது இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவரது ஆத்மாக்களும் சாந்தி பெறுவதற்காக எமது அஞ்சலிகளை தெரிவிப்பதோடும், காயத்தோடு துயருற்று இருக்கின்ற அனைவருக்கும் எமது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.