கொழும்பில் குண்டு தொழிற்சாலையில் வெளிநாட்டவர்கள் பலர் கைது? தடுமாறும் படையினர்...

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவிசாவளையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒன்பது பாகிஸ்தான் நாட்டவர்களும், மூன்று இந்தியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், குறித்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் அவிசாவளை பகுதியில் உள்ள இலத்திரணியல் கடையொன்றில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை என்பது கொழும்புக்கு மிகவும் அருகில் நகரமாகும். அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கினற நகரமாகும்.

இந்நிலையில், குறித்த நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்த பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், குறித்த தொழிற்சாலை தொடர்பில் சற்று முன்னர் பாதுகாப்பு தரப்பினர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என பலரும் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 321க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers