வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு! பொலிசார் மறுப்பு..

Report Print Nivetha in சமூகம்

வெள்ளவத்தையில் வெடித்தது குண்டு அல்ல

வௌ்ளவத்தையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது.

சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, மோட்டார் சைக்கிளினை பொலிஸார் பரிசோதிக்கும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை படையினர் வெடிக்க வைத்துள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

Latest Offers