திருகோணமலையில் பாழடைந்த வீட்டிற்கு அருகில் கைக்குண்டு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு அருகில் இன்று அதிகாலை நபர் ஒருவர் விறகு எடுப்பதற்காக சென்ற போது கைக்குண்டு இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

அபயபுர - பண்டாரநாயக்க மாவத்தை இலக்கம் 125 என்னும் இலக்கத்தில் கே.தீபானிரஞ்சனி என்பவருடைய பாழடைந்த வீட்டுக்கு அருகிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய இடத்தில் காணப்படுவதாகவும், திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று விஷேடபொலிஸ் அதிரடிப்படையினரிடம் செயலிழப்பு செய்ய வைப்பதற்காக ஒப்படைக்கவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.