விசா அனுமதியின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கடவத்தை பொலிஸ் பிரிவில் பஹல பியன்வில பிரதேசத்தில் விசா அனுமதியின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் கைது செய்யப்பட்ட இந்த நபர் 47 வயதான தென் கொரியா நாட்டை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். கடவத்தை பொலிஸார் சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.