காத்தான்குடியில் விசேட தேடுதல்

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகரில் இராணுவத்தினர் விசேட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவின் நேரடியான தலையீட்டில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தேடி இந்த தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசீமின் சொந்த இடம் காத்தான்குடி பிரதேசமாகும்.

முஸ்லிம் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தை அடிப்படையாக கொண்டே கடும் போக்கு இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகள் பரப்பப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காத்தான்குடி பிரதேசம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவின் சொந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டில் இருந்தே கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படை அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரே அரசாங்கமோ போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.