இராணுவத்தினரின் முற்றுகையில் முல்லைத்தீவின் பல பிரதேசங்கள்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை இன்று அதிகாலை தொடக்கம் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிச்சிராபுரம், நீராவிப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனம் சகிதம் சென்ற இராணுவத்தினர் அப்பகுதி எங்கும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களை படையினர் விசாரணை மேற்கொள்வதோடு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் பயணப் பொதிகளை சோதனையிடுகின்றனர்.

மேலும் குறித்த பகுதிகளில் கேப்பாபுலவு உள்ளிட்ட இராணுவ படைமுகாம்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் நேரடி கண்காணிப்பில் இந்த சோதனை நடவடிக்கை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.