வெறிச்சோடி கிடக்கும் கொழும்பு விஹாரமஹா தேவி பூங்கா

Report Print Sinan in சமூகம்

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து மக்களின் நடமாட்டம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

மக்கள் பொழுது போக்கு, விளையாட்டு என்பவற்றின் பக்கம் திருப்ப முடியாத அளவிற்கு தற்கொலை தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

குண்டுதாக்குதலிற்கு முன்னைய நாட்களில் மக்களின் நடமாட்டம் பொது இடங்களில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் குண்டு தாக்குதலையடுத்து மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துள்ளனர்.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

எங்கே குண்டு வெடிக்கும்? வெளியே சென்றால் நாம் இறந்து விடுவோமா? என்ற பயத்தில் மக்கள் தமது வாழ்க்கையை வீட்டுக்குள் வைத்தே கழிக்கின்றனர்.

இந்நிலையில் கொழும்பு, விஹாரமஹா தேவி பூங்காவில் மக்களின் வருகை பெருமளவில் குறைந்து காணப்படுகின்றது.

இதனால் மக்களின் வருகையை நம்பி தொழில் செய்கிற சிறுகடை வியாபாரிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மக்களின் எண்ணிக்கை பொது இடங்களில் குறைந்தே காணப்படும். மக்கள் குழுமி இருந்த பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுவதை பார்க்கும் போது பெரும் கவலையளிக்கின்றது.