முற்றாக முடங்கியது அம்பாறையின் பல பகுதிகள்

Report Print Nesan Nesan in சமூகம்

நேற்றைய தாக்குதலின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளன.

நேற்று சம்மாந்துறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் இடம்பெற்ற தேடுதலின்போது தீவிரவாதிகளின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் தொகுதியில் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறைப் பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் போடப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தினுள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்களிடம் தகவல்கள் பெறப்படுகின்றன.

ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் பொதுமக்கள் வாகனங்கள் தீவிர சோதனைகளின் பின்னரே அனுமதிக்கப்பட்ட போதிலும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அலுவலகங்கள்,வைத்தியசாலைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் முன்பாக இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது பொதுமக்கள் பீதியின் மத்தியிலே இருந்து வருகின்றனர். கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.