இன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

Report Print Malar in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தேடுவதன் காரணமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.எஸ். ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும்வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.