ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்! நீர்கொெழும்பு பிரதி மேயர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் அன்சார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் அவரை தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் வாள், கத்தி 38 செல்போன் மின்கலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொஹமட் அன்சார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்.