திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை- இறக்க கண்டி பகுதியில் மீனவர் ஒருவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இறக்க கண்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.

கடற்கரையோரத்தில் இன்று காலை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது டெட்டனேட்டர் மற்றும் நூல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடற்படையினர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.