தற்கொலை அங்கி தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல அபாயகரமான பொருட்கள் மீட்பு

Report Print Nivetha in சமூகம்

அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் தற்கொலைக் குண்டுதாரிகள் குழுவினர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய இன்று பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வீடொன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, தற்கொலை அங்கிக்குப் பயன்படுத்தப்படும் சிறியரக இரும்பு உருண்டைகளைப் பொருத்தும் தகடு, அதற்காகப் பயன்படுத்தப்படும் சுவிட்ச், பதிவு செய்யப்படாத வாகனம், கூரிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் நேற்று வெடிபொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.