கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத் தாக்குதலில் புனித பொருட்களுக்கு சேதம் ஏற்படவில்லை

Report Print Kamel Kamel in சமூகம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதப் பொருட்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை என தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை ஜூட் ராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று அந்தோனியார் தேவாலயம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின் காரணமாக மிக நீண்ட காலமாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதப் பொருட்களுக்கு எவ்வித சேதமும் விளைவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யேசு கிறிஸ்து நாதர் கல்வாரி மலையில் அறையப்பட்ட சிலுவையின் ஒரு சிறு பகுதி மற்றும் புனித அந்தோனியாரின் புனிதப் பொருட்கள் என்பன இந்த தேவாலயத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தேவாலயம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் புனிதப் பொருட்கள் தேவாலயத்தில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான தேவாலயத்தினை துப்பரவு செய்யும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.