இரத்த கறையுடன் கூடிய கார் மீட்பு : நபர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கல்முனை - கல்முனைகுடி பிரதேசத்தில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து இரத்த கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட கார் ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைப்பேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.