அனலை தீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி

Report Print Ajith Ajith in சமூகம்

அனலை தீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டியினை உடினடியாக கையளிக்குமாறு புதிதாக பதவியேற்ற பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி பணித்துள்ளார்.

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சினால் யாழ். மாவட்டத்திலுள்ள பிராந்திய வைத்தியசாலைகளுக்கான புதிய அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த அம்புலன்ஸ் வண்டிகளில் அனலை தீவு வைத்தியசாலைக்குக்கும் அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டிருந்த போதும் முன்னைய நிர்வாகம் அதனை வழங்காது இருந்தது.

புதிதாக பதவியேற்ற பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, தான் பெறுப்பேற்றதுடன் உடனடியாக இந்த பணிப்பினை வழங்கியுள்ளார்.

இதுவரையில் அனலை தீவு பிரதேசத்திற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று கூட இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தபிரதேச மக்கள் அவசர இலவச அம்புலன்ஸ் சேவை கூட பெற முடியாதுள்ளதும் மிகக் கவலைக்குரியது.

இந்த பணிப்பின் மூலம் பிரதேச மக்கள் பெரும் பயனடைவர்.