மருந்தக உரிமையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார்.

நாடு பூராகவுமுள்ள மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லையென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே மருந்தகங்களில் பரிசோதிக்கும் போது மருந்துகளின் காலாவதித் திகதி, உற்பத்தித் திகதி, விலைகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறும் தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இவ்விடயம் உள்வாங்கப்பட்டு வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்திலும் பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயமென வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.