சஹ்ரான் ஹசீமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தேசிய தவ்ஹித் ஜமாத் தலைவர் மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் ஹசீமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட 31 வயதான முஸ்லிம் இளைஞர், கெக்கிராவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரத்கடவலை பிரதேசத்தில் நகை அடகு வைக்கும் நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகள் கைது செய்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கெக்கிராவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார், சந்தேக நபர் குறித்து கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.