வவுனியாவில் தீவிர சோதனை! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் இராணுவ சீருடையுடன் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை கோவில்குளம், கோவில் புதுக்குளம் ஆகிய பகுதிகளிலும் அப்பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றிலும் பாரிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட படையினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து நாடு திரும்பிய 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து இராணுவ சீருடையை ஒத்த உடையும் வயர் துண்டுகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, அப்பகுதியில் வீதியால் சென்ற வாகனங்களையும் பொதுமக்களையும் வழிமறித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - திலீபன்