தேவாலயத்தில் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

Report Print Ashik in சமூகம்

வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித அந்தோனியார்' தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத விசமிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று மாலையே தெரியவந்துள்ளது.

மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தின் புனித அந்தோனியாரின் திருவிழாவை ஒவ்வொரு வருடமும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.