இராணுவ இலச்சினையுடன் கூடிய சீருடையுடன் இளைஞன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இராணுவ இலச்சினைக்கு இணையான இலச்சினையுடன் கூடிய இராணுவ உடையின் மேல் பகுதியுடன் இளைஞர் ஒருவர் பாணந்துறை வடக்கு கொரகான பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இராணுவ உடையை தான் கடந்த ஜனவரி மாதம் பாணந்துறையில் உள்ள கடை ஒன்றில் கொள்வனவு செய்ததாக இளைஞர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இந்த உடையில் இருந்த இலச்சினை இராணுவ இலச்சினைக்கு சிறிது வேறுபாடு காணப்படுவதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.