ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்! உயிரிழந்தவர்களுக்கு யாழ். ஆயர் இல்லத்தில் அஞ்சலி

Report Print Sumi in சமூகம்

உயிர்த்த ஞாயிறு அன்று குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.ஆயர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.ஆயர் யஸ்ரின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

பிரதான சுடரை யாழ். ஆயர் யஸ்ரின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட பங்குத்தந்தையர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.