குளவி கொட்டுக்கு இலக்காகிய 14 தேயிலை தொழிலாளர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ பகுதியில் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு தோட்ட 07ஆம் இலக்க தேயிலை மலையின் மரம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து அங்கு கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் அடங்குகின்றனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.