பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். அந்தோனியார் ஆலய முகப்பு திறப்பு விழா

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ்ப்பாணம் - மணற்காடு அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய முகப்பு திறப்பு விழா பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது.

குறித்த திறப்பு விழா நேற்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதமவிருந்தினராக யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கலந்து கொண்டதுடன், ஆலய முகப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பங்கு தந்தைகளை தவிர பொது மக்கள் அனைவரும் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இது தவிர குறித்த வளாகத்தில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இராணுவத்தினர், பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரால் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.