மூதூர் பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட் கிராமங்களில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ தற்காலிகமாக குடியிருப்பவர்கள் அந்த கிராம சேவகர்கள் ஊடாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்போது ஆள் அடையாளத்தையும், வதிவிடத்தையும் உறுதிப்படுத்துவதற்காக கிராம சேவகர்கள் கேட்கின்ற ஆவணங்களை வழங்கி பதிவு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள், பிரபல்யமான உணவகங்கள் என்பவற்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதனோடு தொடர்புபட்டவர்களை தேடும் பணி வீடுகள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.