சஹரானின் சகோதரரது வீட்டில் தற்கொலைக் குண்டு அங்கிகள்

Report Print Kamel Kamel in சமூகம்

சஹரானின் சகோதரரது வீட்டில் தற்கொலைக் குண்டு அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹரான் ஹாசீமின் சகோதரர் ரில்வானின் காத்தான்குடி வீட்டில் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தும் நான்கு அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

நான்கு செல்லிடப்பேசிகள், இரண்டு ஏ.ரீ.எம். அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்டனவும் ரில்வானின் பிள்ளைகளது புகைப்படங்களும், தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த சுற்றி வளைப்புத் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

வீட்டில் இருந்த ரில்வானின் மாமா மற்றும் மாமி ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.