யட்டியாந்தோட்டை பகுதியில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று பொலிஸாரால் மீட்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

யட்டியாந்தோட்டை - கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர், மின்சாதனங்களை பழுது பார்ப்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் இருந்த குறித்த உபகரணத்தை மறைக்க முற்படும் போது பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை ருவான்வெல்ல நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.