வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவான முறையில் மூன்று மணித்தியாலயத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மோட்டார் சைக்கிளை எவரும் உரிமை கோராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டதினை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், பொலிஸார் ஆகியோர் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரின் உதவி கோரியுள்ளனர்.

இந்நிலையில் மோட்டார் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த இன்சின் நம்பர், செசி நம்பர் உள்ள அட்டையில் காணப்பட்ட மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையத்தினை பொலிஸார் தொடர்பு கொண்டு உரிமையாளர் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் மோட்டார் வண்டி உரிமையாளரை பொலிஸார் கடுமையாக எச்சரித்து கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது சைக்கிள் உரிமையாளர் மது போதையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.