பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவிலாளர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் அனுமதியில்லாமல் நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈராக் நாட்டவரான குறித்த நபர் சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்பட கலைஞராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து குறித்த ஊடகத்தின் சார்ப்பாக இலங்கைக்கு வந்துள்ளதாக சித்தீகீ அஹமட் தானிஸ் (Sibdiqui Ahamad Danish) எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21ம் திகதி கட்டுவாபிட்டிய தேவாலயாத்தில் உயிரிழந்த மேரிஸ்டெல்ல பாடசாலையின் மாணவன் ஒருவரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஊடகவிலாளர் சென்றுள்ளார்.

இதன் போது பாடசாலையில் இருந்த பெற்றோர்கள் 119 இலக்கத்திற்கு அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த இன்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.