கொழும்பில் ஆபத்தான வெடி பொருட்கள் மீட்பு

Report Print Nivetha in சமூகம்

ஜாஎல - ஏக்கலப் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ஆபத்தான பெருந்தொகை வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்திட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வெடிபொருட்களில் அதிகளவானவை எறிகணைகள் என்றும் அதில் விடுதலைப்புலிகளின் எறிகணைகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைகள் போர் நடைபெற்ற இடங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.