ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

Report Print Kaviyan in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் ஊற்காவற்றுறைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமிய வீதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், மைதானங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், மீளாய்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் 47 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மஞ்சுளா சதீசன் மற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டார அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஒப்பந்தகாரர்கள், பயனடைவோர் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.