மன்னார் மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

நாட்டில் கடந்த 21ம் திகதி இடம் பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களின் போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்,மாவட்டத்தில் உள்ள சுகாதாரம் மருத்துவ வசதிகள் உற்பட அவசிய தேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனவிரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.