வவுனியாவில் உயிரிழந்த நகரசபை ஊழியர்களுக்கு அஞ்சலி நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபையின் கொல்களத்தில் கடமையின் போது உயிரிழந்த சுகாதார தொழிலாளிகளுக்கு இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சகாயமாதாபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபையின் கொல்களத்தின் கழிவு குழியை சுத்தம் செய்தபோது விச வாயு தாக்கத்தினால் சே.செல்வராசா, பி. சசிகுமார், சந்தனசாமி, வசந்தகுமார் ஆகிய சுகாதார தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.