உயிர் நீத்த உறவுகளுக்காக மன்னாரில் சர்வமதப் பிரார்த்தனை

Report Print Ashik in சமூகம்

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டியும் சர்வமத பிரார்த்தனையொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சர்வமத பிரார்த்தனை மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில், அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் குணமடையவும், இந்த நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப்பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியின் பின் தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.