கம்பெரலிய ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் மீளாய்வு கூட்டம்

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - கண்டாவளையில் கம்பெரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் சிறீதரன் மூலம் 30 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்திகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன்போது கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் கண்டாவளையில் கிராமிய வீதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், மைதானங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உபதவிசாளர் தவபாலன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers