கிளாலியில் வீதிகள் புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

Report Print Arivakam in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தொடர் முயற்சிகளால் கிளாலி வீதி புனரமைப்பு செய்யப்படுவதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

கிளாலியில் 8 கோடியே 10 இலட்சம் ரூபா செலவில் வீதி புனரமைக்கப்படவுள்ளது. புனரமைக்கப்படவுள்ள வீதிக்கான பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக தேவைகள் தொடர்பாக என்னிடம் தொலைபேசியிலும் அலுவலகத்திலும் தொடர்ந்து கூறி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினராக இவரை நான் பார்க்கிறேன்.

பிரதமர் தலைமையில் நடைபெறுகின்ற கூட்டங்களில் கூட கிளிநொச்சி மாவட்டத்தின் உடைய அபிவிருத்திகள் தொடர்பாக செய்ய வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்து அதை நடைமுறைப் படுத்துவதற்கான ஆலோசனைகளை எங்களுடைய அலுவலகத்திற்கு வந்து பெற்றுச் செல்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அபிவிருத்திக்காக மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வருகின்ற நிதியை ஒப்பந்ததாரர்கள் மீளக் திரும்பாது வகையில் பணியினை ஆற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் மாவட்ட அரச அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers