கிளிநொச்சியில் பலத்த சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று பாடசாலைகள் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய 64 பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர்கள் பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரால் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தக பைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாடசாலைகள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட்டுள்ளது.

மேலும் இதேவேளை குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது மோம்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களின் வரவு ஐம்பது வீதமாக காணப்பட்டுள்ளது என்றும் வழமையான மனநிலையில் மாணவர்கள் சமூகம் அளித்துள்ளனர் என்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சிரமங்களுக்கு மத்தியில் தமது புத்தகங்களை எடுத்துவருவதை காணக்கூடியதாக உள்ளது.

மேலதிக தகவல்கள் - சுமன்