கஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டுகள்! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

Report Print Murali Murali in சமூகம்
372Shares

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழு தலைவர் கஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பொலிஸார் மன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

கஞ்சிபானை இம்ரான் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

எனினும், நீதிமன்ற கட்டளைக்கு அமைய அவர் மேற்பார்வைக்காக நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது சகாக்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

இதனையடுத்து குறித்த மூவரையும் எதிர்வரும் ஜூலை 12ம் திகதி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.