அமெரிக்காவில் காத்திருந்த பெற்றோர்! கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்

Report Print Vethu Vethu in சமூகம்
1154Shares

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chelsea Decaminada என்ற பெண் அதிகாரி கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chelsea மீண்டு வருவார் என மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவரை இழந்து விட்டோம். இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என அவரது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்வதாக அமெரிக்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொதுத்துறை ஆலோசகரின் அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாட்டு திட்டத்தில் Chelsea திறமையான சர்வதேச திட்ட நிபுணராக செயற்பட்டு வந்தார் என்று அமெரிக்க வர்த்தக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர் தனது வாழ்க்கையை பொது பணிக்காக அர்ப்பணித்த ஒருவராகும். அத்துடன் அவர் தனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.