திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்! இரவோடு இரவாக தடுக்கப்பட்டது பாரிய அசம்பாவிதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வர்த்தக நிலையம் நேற்றைய தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆகியோரின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவி ஏற்படவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கே தீவிபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவளை தீ விபத்து இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் இருந்து ட்ரோன் கமரா ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த ட்ரோன் கமரா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.